Sun. Oct 5th, 2025



செப்டம்பர் 29, குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் உள்ள கே.வி.எஸ். ஹார்ட் கேர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இலவச இருதய சிகிச்சை முகாமை நடத்தியது.

இம்முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் கே. சந்திரன் தலைமை வகித்தார்.
பொது மருத்துவர் எஸ். சுகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. சுரேஷ், முன்னாள் ஆளுநர் ஜே.கே.என். பழனி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ் சுகுமார் தலைமையில் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் முன்னாள் தலைவர் சி. கண்ணன், ஆர்.வி. ஹரிகிருஷ்ணன், ஏ. மேகராஜ், ஆர். அன்பு, வி.என். அண்ணாமலை, டி.எஸ். ரவிச்சந்திரன், நல்லசிவம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

✍️ குடியாத்தம் – K.V. ராஜேந்திரன்

By TN NEWS