Sun. Oct 5th, 2025



திருவாரூரில் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சிறுவன், மாதம் ஒரே ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவியாளராக பணியில் இருந்தான். அவனது பெயர் முத்துசாமி.

ஒரு நாள் கிராமத்தில் அணை உடைந்தது. அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுவன் துணிவோடு அங்கு சென்று, எவ்வளவு தூரம் உடைந்தது, எவ்வளவு பொருட்கள் தேவை, எவ்வளவு செலவாகும் என அனைத்தையும் சரியாக எழுதி வந்து தாசில்தாரிடம் கொடுத்தான். பிறகு மற்ற அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, அந்தச் சிறுவன் எழுதிய கணக்குகள் நூற்றுக்கு நூறு சரி என்று தெரிந்தது.

மற்றொரு நாள், பெரிய மிராசுதாரின் நில வரியை கணக்கிடும்போது கூட, முத்துசாமி புத்தகத்தைப் புரட்டிப் பார்க்காமல், மனக்கணக்கில் சொல்லிய தொகை முற்றிலும் சரியாக இருந்தது. இது எல்லாரையும் வியக்க வைத்தது.

அவனது திறமையையும், அசாதாரண ஞாபக சக்தியையும் கண்டு, தாசில்தார் அவரது சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தினார். ஆனால் அதுவும் மூன்று ரூபாய்தான்!

ஆனால் அந்த மூன்று ரூபாய் உதவியாளரே பிற்பாடு சர் டி. முத்துசாமி அய்யர் – 1877இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். பின்னர் அவர் 1893இல் தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தார்.

👉 இந்தக் கதை நமக்கு சொல்லுவது:

திறமைக்கும் உழைப்புக்கும் வயது தடையில்லை.

சிறிய வாய்ப்பை கூட சிறப்பாக பயன்படுத்தினால், அது பெரிய உச்சிக்கே கொண்டு செல்லும்.

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, மனக்கணக்கு – எதையும் சாதிக்க வைக்கும்!

சேக் முகைதீன்

By TN NEWS