கள்ளக்குறிச்சி மாவட்டம் – மணலூர்பேட்டை | 24.09.2025
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சி வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிளை நூலகம்வில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தோர்:
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்: ரா. சிவசங்கரி
நல்நூலகர்: மு. அன்பழகன்
திருக்குறள் திருப்பணிக்குழு உறுப்பினர்கள்: தமிழ்ச் செம்மல் முத்தமிழ் முத்தன், கவிஞர் இதயம் கிருட்டிணா, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் சாந்தகுமார்
திருக்குறள் அமைப்பின் தலைவர்: புலவர் அய்யாமோகன் – “திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்
சிறப்பு நிகழ்வுகள்:
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கான திருக்குறள் வினாடி வினா
வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் பலகை பரிசளிப்பு
பயிற்சி ஒருங்கிணைப்பு:
தமிழ் வளர்ச்சித் துறை இளநிலை உதவியாளர் தமிழ்ச்செல்வி
பயிற்சியில் போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் வளர்மதிச் செல்வி நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்:
V. ஜெய்ஷங்கர்
மாவட்ட முதன்மை செய்தியாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்