Sun. Oct 5th, 2025

மரக்காணம் காவல் நிலையம் | 24.09.2025

சம்பவம்:
செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கோவிந்தன் மனைவி தாட்சாயிணி, தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேஸ் ஸ்டவ் வழங்குவதாக கூறி, ஆசை வார்த்தை மூலம் ஏமாற்றினர்.

பிறகு, அவர்கள் வழங்கிய “சுரண்டல் அட்டை” மூலம் வெள்ளி கொலுசு ரூ.6,700 கொடுத்து வாங்கினதால், அதே பொருள் போலியானதாக இருப்பது தெரிந்து புகார் அளிக்கப்பட்டது.

காவல் நடவடிக்கை:
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS உத்தரவுப்படி:

உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி மேற்பார்வையில்

காவல் ஆய்வாளர் பரணிநாதன் மற்றும் காவலர்கள் தலைமையில்

தொடர்புடைய சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி கெஸ்ட் ஹவுஸ் அருகில் இரு சக்கர வாகனங்களில் இருந்த எதிரிகளை அடையாளம் கண்டனர்.


கைதானவர்கள்:

1. மணிகண்டன், 27 – சங்கரன்கோவில், தென்காசி


2. உதயசூரியன், 27 – தென்காசி


3. சண்முக நகுலன், 24 – தென்காசி


4. உதயகுமார், 29 – சேலம்


5. முத்துக்குமார், 38 – தென்காசி


6. கோபி, 33 – சீலநாயக்கன்பட்டி, சேலம்


7. மோகன்ராஜ், 31 – சேலம்


8. தினேஷ், 22 – சேலம்


9. முத்து மாரியப்பன், 30 – கோவில்பட்டி, தூத்துக்குடி


10. வனராஜா, 26 – சீலநாயக்கன்பட்டி, சேலம்


விசாரணையில் தெரிய வந்தது:
இவர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் விற்குவதாக கூறி, பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:

2 இரு சக்கர வாகனங்கள்

1 கார்

15 வெள்ளி மூலம் பூசப்பட்ட கொலுசு

4 மிக்சிகள்

2 கேஸ் ஸ்டவ்

9 செல்போன்கள்


நடவடிக்கை:
அனைவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டுடே செய்திக்காக,

V. ஜெய்சங்கர்

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

 

By TN NEWS