தந்தை கண்ணில் மிளகாய்த்தூள் வீசி 4 வயது குழந்தை கடத்தல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவளக்கார தெருவில் வசிக்கும் வேணு – ஜனனி தம்பதியரின் 4 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தந்தை பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது, ஹெல்மெட் அணிந்த ஒருவர் திடீரென கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி, குழந்தையை காரில் ஏற்றி கடத்திச் சென்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், குழந்தையை மாதனூர் அருகே விட்டு விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்