வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சின்னத்தோட்டாளம், குளித்திகை, கீழ்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமித்ரா, லோகேஸ்வரி, மோரி தலைமையில் நடந்த இந்த முகாமை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா, பெயர் மாற்றம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
முகாமில் ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் உஷாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவிதா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
முடிவில் ஊராட்சி செயலர்கள் தீபக்ராஜ், பிரபாகரன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்