வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆய்வு:
தருமபுரி கடத்தூர் MCS மஹாலில், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, மாண்புமிகு கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், மண்டல பொறுப்பாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் ஆலோசனையின்படியும் நடைபெற்றது.
மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் முன்னிலையில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் T. சந்திரசேகர் தலைமையிலும் கூட்டம் நடந்தது.
முக்கிய அம்சங்கள் :
வாக்குச்சாவடி வாரியாக பட்டியல் திருத்தம் மேற்கொள்வது
வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) பணி ஒதுக்கீடு
கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகள்
கலந்துகொண்ட முக்கியவர்கள் :
மாவட்ட அவைத் தலைவர் கே. மனோகரன் (முன்னாள் எம்.எல்.ஏ.)
தேர்தல் பார்வையாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார்
மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ. சத்தியமூர்த்தி
தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. சித்தார்த்தன்
ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள்.
இந்த நிகழ்வை தருமபுரி மேற்கு மாவட்ட திமுக ஐடி விங் ஏற்பாடு செய்தது.
பசுபதி – செய்தியாளர்