Mon. Oct 6th, 2025



மத்திய அரசு மாநிலங்களை புறக்கணிக்கக் கூடாது – எச்சரிக்கை விடுத்த முதல்வர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பதிவில் மத்திய அரசை வலியுறுத்தி கூறியதாவது:

பிரதமர் கூறியுள்ளபடி, ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பும், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வும் இந்தியர்களுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க உதவுவதாகும். இதைத்தான் நாங்கள் எதிர்க்கட்சிகளாக பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தோம்.

இந்த நடவடிக்கைகள் 8 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் ஏராளமான கோடிகளைச் சேமித்திருப்பார்கள்.

தற்போதைய வரிக் குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்காகும். ஆனால், மத்திய அரசு இதை வெளிப்படையாகச் சொல்லவோ பாராட்டவோ தயாராக இல்லை.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான நிதியைத் தர மறுக்கிறது. குறிப்பாக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது.

கூட்டாட்சிக் கருத்தியலை புறக்கணித்து மாநில அரசுகளைத் தண்டிப்பதன் மூலம் இந்தியா முன்னேற முடியாது.


📌 முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது:

“கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள்,
உரிய நிதியை விடுவியுங்கள்,
மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதை வழங்குங்கள்.”

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

By TN NEWS