Sun. Oct 5th, 2025

மொரப்பூரில் மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா!

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில், மதிமுக இயக்கத் தலைவர் மதிப்பிற்குரிய வைகோ அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதற்கட்டமாக பெரமாண்டபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் கோ. இராமதாஸ் கலந்து கொண்டு ஏழை மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் கேக் வெட்டி இனிப்புகள் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சி. பட்டுராசா, மாநில விவசாய அணி துணை செயலாளர் பி.எம். ராஜாமணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கடாசலம், கிளை கழக செயலாளர்கள் சண்முகம், அன்பரசு, சமூக ஆர்வலர் சின்னமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் மற்றும் தோழமை புரிந்த அனைவருக்கும் மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

🖋 பசுபதி – தலைமை செய்தியாளர்

 

By TN NEWS