வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி “கலையால் கல்வி செய்வோம்” என்ற முழக்கத்துடன் கல்லூரி கலைத் திருவிழா செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது.
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, பாடல் வரிகள் எழுதல், நடனப்போட்டி, பாடல் போட்டி, நெருப்பில்லா சமையல் உள்ளிட்ட மொத்தம் 30 வகை போட்டிகள் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக நடத்தப்படுகின்றன.
தொடக்கவிழா:
24.09.2025 காலை 10 மணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எபெனேசர் தலைமையில் நடைபெறும். இதில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் சூ. காவேரி அம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பல்வேறு போட்டிகளை, தமிழ்த்துறை தலைவர் முனைவர் மூ. கல்பனா, ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் அ. ஸ்ரீதர், கணினித் துறை தலைவர் முனைவர் கா. அருளானந்தம், விலங்கியல் துறை தலைவர் முனைவர் வ.க. சிவகுமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சே. கருணாநிதி, இயற்பியல் துறை தலைவர் முனைவர் ஆ. தாமரை, வேதியியல் துறை தலைவர் ஆர். தமீனுல் அன்சாரி, தாவரவியல் துறை தலைவர் முனைவர் ப.மு. சுஜாதா, பொருளியல் துறை தலைவர் கி. விஜயரங்கம், வணிகவியல் துறை தலைவர் முனைவர் பா. கார்த்திகேயன், வணிக நிர்வாக துறை தலைவர் முனைவர் ஜி. லோகநாதன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்த உள்ளனர்.
பரிசளிப்பு விழா:
30.09.2025 அன்று நடைபெறும். இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் ஆ. மலர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.
இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் கல்லூரி நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மு. மலர்விழி, முனைவர் ந. ஜெயலட்சுமி, முனைவர் பா. தேவப்பிரியா, முனைவர் மு. கல்பனா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்த உள்ளனர்.
இக்கலைத் திருவிழா, மாணவர்களின் கலை மற்றும் அறிவுத் திறன்களை வெளிக்கொண்டு அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சிறப்பான மேடையாக அமைய உள்ளது.
🖋 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்