விழுப்புரத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு அறை அடிக்கல் நாட்டு விழா!
விழுப்புரம்:
விழுப்புரம் நகரத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று (செப்.21) நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா முன்னிலையில், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் ஞானவேல் தலைமையில் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமார ராஜா, தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் – மதியழகன்.