வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சேகரன் தலைமையில் போலீசார் பரதராமி அடுத்த பெருமாள் பல்லி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மேற்கு வங்காளத்தில் இருந்து ஈரோடு நோக்கி தோல்கள் ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் முதலில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரி டிரைவர் முத்துக்காளை (30), தந்தை: கருப்புசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மற்றும் இணை டிரைவர் திருச்செந்தூரான் (47), தந்தை: கண்ணுசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் லாரியை முழுமையாக சோதனை செய்ததில் கூடுதலாக 34 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 36 கிலோ கஞ்சா மற்றும் லாரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்