1. போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவும், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2. அமேசான் காடுகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மர்ம மரணங்கள்:
குளோபல் விட்னஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்ததன் படி, அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,253 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதில் பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேர் உயிரிழந்தனர். அமேசான் காடுகள் உலகின் “நுரையீரல்” எனப் பிரபலமாகவும், 60,000 கோடி டன் ஆக்சிஜன் வழங்கும் பகுதியாகவும் கருதப்படுகிறது.
3. அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டம்:
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மதுரை உள்பட தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 125 திட்ட மதிப்பீடுகளுக்கு ரூ.881.42 கோடி ஒதுக்கப்பட்டு, இதில் 104 திட்டங்களுக்கு ரூ.716.84 கோடி அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
4. அரசு ஊழியர்களுக்கு அபராதம்:
கோப்புகள் தாமதமாக சமர்ப்பிக்கப்படுவதை தவிர்க்க புதுச்சேரி சட்டபேரவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தாமதமாய் கோப்புகளை சமர்ப்பித்தால், நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.
5. அண்ணாமலை பரபரப்பு பேட்டி:
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறுகையில், அவர் தனது சொந்த சம்பாத்தியத்தில் நிலம் வாங்கி இருக்கிறார் மற்றும் அதற்கான கணக்கை காட்டுவார்.
6. மாநில அரசியல் நிலவரம்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவேறு நிலைப்பாட்டில் செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஈபிஎஸ் (முன்னாள் முதல்வர்) கூறியதாவது, “காங்கிரஸ் சிலர் 117 இடங்களில் போட்டியிடுவோம், ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறுவோம் என பேசி வருகின்றனர்”.
சேக் முகைதீன்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்