Sun. Oct 5th, 2025


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த அனைத்து போராட்டங்களையும், குறிப்பாக 1974 பிறகு நிகழ்ந்த போராட்டங்களை ஆராய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி இயக்கம் (BPR&D) க்கு உத்தரவு, என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

அவர் விரும்பும் நோக்கம்: போராட்டங்களின் “பொருளாதார அம்சங்கள்”, இறுதி முடிவுகள் மற்றும் “பின்னணி அமைப்புகள்” ஆகியவற்றைப் பார்வையிட்டு, எதிர்காலத்தில் vested interest-க்கள் ஏற்படுத்தும் கூட்டவியல் போராட்டங்களைத் தடுக்க ஒரு Standard Operating Procedure (SOP) உருவாக்குவதாகும்.

இந்தக் கட்டளைகள், அமித் ஷா நேஷனல் செக்யூரிட்டி ஸ்ட்ராட்டஜீஸ் கன்ஃபரன்ஸ்-2025 இல் ஜூலை மாதம் உரையாற்றும்போது வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BPR&D, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, குழுவை அமைத்து மாநில காவல் துறைகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவுகளின் பழைய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்வதாகவும் கூறப்படுகிறது.

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS