18 செப்டம்பர் 2025 | வேலூர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் புதிய நீதி கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் நல்வாழ்த்துகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் மற்றும் கைத்தறி காவலர் எஸ். ரமேஷ் தலைமையிலும், மண்டல செயலாளர் பி. சரவணன் முன்னிலையிலும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக நகர தலைவர் எம்.கே. ஜெகன், மாவட்ட செயலாளர்கள் சாய். எஸ். ஆனந்தன், ஸ்ரீகாந்த், சுசில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் புதிய நீதி கட்சியின் சசிகுமார், வெங்கடேசன், கன்னியப்பன், செந்தில்குமார், செல்வம், சுந்தர்ராஜன், மோகன், திருநாவுக்கரசு, கார்த்திகேயன், சி. வெங்கடேசன், ராமு, ஹேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல், பாஜக நிர்வாகிகள் பிரபாகரன், கணேசன், பாலாஜி, இளங்கோ, ராஜா, மணிகண்டன் உள்ளிட்டோரும் கட்சி தொண்டர்களோடும் இணைந்து விழாவை சிறப்பித்தனர்.
✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்