குடியாத்தம், செப்.17:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அன்னதான மண்டபம் இன்று ஒரு சமூகச் சேவை தளமாக மாறியது. விஸ்வகர்மா சமுதாய மக்கள், ஜெம்ஸ் & ஜூவல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் (GJEPC) மற்றும் வேலூர் ரத்த மையம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு நகைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கே.இன்பநாதன் தலைமை தாங்கினார். சங்கப் பொருளாளர் எம்.என். ஜோதி குமார் முன்னிலை வகித்தார். கே.எம். பாஸ்கர் ஆச்சாரி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் விஸ்வகர்மா சங்கத் தலைவர் எம்.அசோகன், தச்சி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எம்.சண்முக ஆச்சாரி, இளைஞர் அணி தலைவர் எம்.எஸ். நாகையா உள்ளிட்ட சமூக, தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.
200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் இரத்ததானத்தில் பங்கேற்றனர். “ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் இரத்தத் தானம் சமூகத்தின் மிகப்பெரிய பங்களிப்பு” என பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் ஜெகநாதன் ஆச்சாரி நன்றியுரை ஆற்றி, சமூகத்தின் ஒற்றுமை மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர், கே.வி. ராஜேந்திரன்