Sun. Oct 5th, 2025



தென்காசி – செப்டம்பர் 16

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக்குமாரசாமி திருக்கோவில் உச்சபெரும் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கிரிவல பாதை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அமைய உள்ளது. இதற்கான முன்னோட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

விழாவில், திருக்கோவில் உதவி ஆணையர் கோமதி தலைமையில், அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு கிரிவல பாதை திட்டத்தின் தொடக்கத்திற்கு ஆன்மிக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்றவர்கள்:

அறங்காவலர் குழு உறுப்பினர்கள்: பண்பொழி இசக்கி, வடகரை பாப்பா, அழகை கணேசன், குற்றால நாதர்

திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர்: சக்தி முருகேசன்

திருக்கோவில் கணக்கர்: லெட்சுமணன்

அர்ச்சகர்: ரமேஷ்

இந்திய சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்

ஜே. அமல்ராஜ், மாவட்ட தலைமை நிருபர், தென்காசி மாவட்டம்

 

By TN NEWS