Sun. Oct 5th, 2025



விழுப்புரம் – செப்டம்பர் 16

விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அமைந்திருந்த மின்மாற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவியது.

இந்நிலையை கவனத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் குமார், IPS அவர்களின் மேற்பார்வையில் மின்வாரிய ஊழியர்கள் மின் மாற்றியை சாலையிலிருந்து அகற்றி, சாலையின் ஓரமாக மாற்றி அமைத்தனர்.

இதன் மூலம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது.

இந்த பணியில் முக்கிய பங்கு வகித்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த், விழுப்புரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் விஜயரங்கன், குமாரராஜா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பாக பாராட்டினார்.

இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்து, காவல்துறையின் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டினர்.

V. ஜெய்சங்கர், முதன்மை செய்தியாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS