Sun. Oct 5th, 2025

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் – “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி!

மோளையானூர்:
பாப்பிரெட்டிப்பட்டி திமுக மாவட்ட கழக அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc., Ph.D. அவர்கள் சிறப்பு பேட்டி அளித்தார்.

மாண்புமிகு கழகத் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர், மாண்புமிகு இளைஞரணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், மண்டல பொறுப்பாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும், அவர் கருத்து வெளியிட்டார்.

அதில், அவர் கூறியவை:

“தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி செய்கிறேன்.”

“வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல்களுக்கு எதிராக நிற்பேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி செய்கிறேன்.”

“நீட் மற்றும் இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளை முடக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்த்துப் போராடுவேன். மாணவர்களுக்கு உரிய கல்வி நிதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.”

“தமிழ் மொழி, பண்பாடு, பெருமை ஆகியவற்றுக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன்.”

“பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களுக்கான நிதிக்காக போராடுவேன்.”


மேலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் உள்ள 897 வாக்குசாவடிகளில் ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ உறுதிமொழி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்:
மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் சி.முத்துக்குமார், பி.எஸ்.சரவணன், டி.நெப்போலியன், பேரூர் கழகச் செயலாளர் கொ.ஜெயசந்திரன், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், வர்த்தகர் அணி அமைப்பாளர் தாமோதிரன், ஐடி விங் நிர்வாகிகள் சி.சண்முகம், கொ.கண்ணப்பன், மயில்குமார், சே.சதிஷ்குமார், ஜோதிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுபதி செய்தியாளர்

By TN NEWS