Sun. Oct 5th, 2025

🌎💢♨️ “ஒரு பந்து உலகையே மாற்றும்!” – ஈஷா கிராமோத்சவம் பெண்களுக்கு தரும் புத்துணர்ச்சி:

கோவை:

“சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள், என்னையும் என்னைச் சுற்றிய பெண்களையும் மாற்றிய பிறகு, அது உண்மையிலேயே உலகையே மாற்றும் வல்லமை கொண்டது என்பதை உணர்ந்தேன்” என நெல்லூர் மாவட்டம் கோட்டால் கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா பகிர்ந்துள்ளார்.

ஈஷா கிராமோத்சவத்தில் கலந்து கொண்ட தனது அனுபவத்தைப் பற்றி ஆயிஷா கூறுகையில் –
“சின்ன வயதில் விளையாடிய பிறகு வாழ்க்கையில் மீண்டும் விளையாட்டு எனக்குப் பகுதி ஆகவில்லை. ஆனால் ஈஷா அழைத்தபோது தயக்கத்துடன் சேர்ந்தேன். பெண்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொன்னதால், என் அம்மா, பெரியம்மா, அண்ணி எல்லோரும் சேர்ந்து விளையாடத் தொடங்கினோம். அந்த பந்து என் கைகளில் வந்தவுடன் நேரம் எப்படி சென்றது என்று தெரியாமல் போனது. அது எங்களுக்கு எல்லோருக்கும் பெரிய மகிழ்ச்சி தந்தது.”

அவர் மேலும் கூறினார்:
“எங்கள் குடும்பத்தில் 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் விளையாடினோம். 50 வயதான என் அம்மா, 60 வயதான என் பெரியம்மா, 18 வயது உறவுக்கார சிறுமி எல்லோரும் ஒன்றாக இணைந்தோம். போட்டிகளில் தோற்றாலும், இப்படி ஒன்றாக விளையாடியது எங்களுக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது. குறிப்பாக என் பெரியம்மா – எப்போதும் கடையில், வீட்டில் வேலை பார்த்தவர். ஆனால் விளையாடும்போது அவர் முகத்தில் தெரிந்த புத்துணர்ச்சி மறக்க முடியாதது.”

பெண்களுக்கு வெளியே பாதுகாப்பாக விளையாடுவது சிரமம் தான் என்கிறார் ஆயிஷா.
“ஆனால் ஈஷா கிராமோத்சவத்தில் மிகுந்த பாதுகாப்பான சூழல் இருந்தது. அதனால் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. நாங்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். முதலில் எங்கள் உறவினர்கள் மட்டும் அணியை அமைத்தோம். அடுத்த ஆண்டே மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களும் எங்கள் அணியில் இணைந்தனர். சமூக வேற்றுமையை கடந்து அனைவரும் ஒரே அணியாக விளையாடியது எங்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.”

அவரது தனிப்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்:
“நான் உணர்ச்சி ரீதியாக கடினமான நிலையைச் சந்தித்திருந்தேன். ஆனால் விளையாட்டு தொடங்கியபோது, அந்த வலி, சுமை எல்லாம் காணாமல் போனது. வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியது. சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள் என் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது.”

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள்

By TN NEWS