Sun. Oct 5th, 2025



உலகையே உலுக்கிய நாள்

2001 செப்டம்பர் 11.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உலக வர்த்தக மையம் இடிந்து விழுந்த அந்தத் தருணத்தில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. உலக வரலாற்றில் ஒருபோதும் அழியாத கரும்புள்ளியாக அது பதிந்துவிட்டது.

“Reading Makes a Country Great”

அந்தச் சமயம், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளி மாணவர்களுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரின் பின்னால் சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்:

“Reading Makes a Country Great”
அதாவது, “படிப்பது ஒரு நாட்டை வளமாக்கும்”.

இது ஒரு சாதாரண வாசகம் அல்ல; நாடுகளை உயர்த்தும் அடிப்படை உண்மையைச் சொல்வது.

பேராசையின் வேர்கள்

GREED = G + READ
இங்கு G என்பது God / Guru.
அதாவது, ஆன்மிகமும் – கல்வியும் சேர்ந்து தான் மனிதனை உயர்த்தும்.


மகாத்மா காந்தி எச்சரித்தார்:

“There is enough for everybody’s NEED, not for their GREED.”
(ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப உலகில் வளம் இருக்கிறது; பேராசைக்கேற்ப இல்லை).

திருக்குறளின் படிகள்

சென்னிமலை முருகன் சன்னதி அடைய 1330 படிகள் ஏற வேண்டும்.
அதாவது, திருக்குறள் 1330 குறள்களின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்தினால் மட்டுமே நாம் உயர முடியும் என்ற அடையாளம் போல அது விளங்குகிறது.

நம்மை கற்றுக் கொடுக்கும் பாடம்

படிக்கவும் – அறிவை வளர்த்துக் கொள்ள

சிந்திக்கவும் – நல்லதைத் தேர்வு செய்ய

பேராசையை ஒழிக்கவும் – மனிதத்துவம் காக்க


9/11 நமக்கு சொல்லும் உண்மை:

பேராசை மனிதனை அழிக்கிறது;
அறிவும் ஒழுக்கமும் மட்டுமே மனிதனை உயர்த்தும்.

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள்

By TN NEWS