Sun. Oct 5th, 2025

குடியாத்தம், செப்டம்பர் 11

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெரும்பாடி பகுதியில் சில இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்துவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயந்தி, சிறப்பு ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் பெரும்பாடி பகுதியில் தீவிர ரோந்து நடத்தினர்.

அப்போது முல்லைநகர் பகுதியில் கும்பலாக நின்றிருந்த நால்வரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த ஐயப்பன், மோகன், நவீன் குமார், தேவன் என தெரியவந்தது.

அவர்களை சோதனை செய்ததில், பாக்கெட்டில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருந்ததும், பயன்படுத்தியிருந்த இரு சக்கர வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், நான்கு பேரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இன்னும் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS