Sun. Oct 5th, 2025

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:
குடியாத்தம் வட்டம் மேல் முட்டுக்கூர், செருவாங்கி, செட்டிகுப்பம், ராஜா குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள்:

மேல் முட்டுக்கூர்: சுந்தர்

செருவாங்கி: சாந்தி மோகன்

செட்டிகுப்பம்: இந்திராணி ரவிச்சந்திரன்

ராஜா குப்பம்: மம்தா இமயகிரி
முன்னிலை வகித்தனர்.


குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜியன், குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடக்கி வைத்தார்.

இதில்,

வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி,

ஒன்றிய பெருந்தலைவர் என். இ. சத்யானந்தம்,

வட்டாட்சியர் பழனி
ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.


ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி நித்தியானந்தம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

முகாமில், மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப் பட்டா, மின் இணைப்பு பெயர் மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற செயலாளர்கள், துணைத்தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

📰 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS