தென்காசி, செப்டம்பர் 10:
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழக வணிகர் சம்மேளன தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை வகித்தார். மாநில செயற்குழுத் தலைவர் மாரியப்பன், பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில மகளிரணி செயலாளர் பானுமதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தின் போது, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நியமனச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் வலைத்தளம் (Website) வெளியிடப்பட்டது. அதன் பின் தலைவர் தமிழ்ச் செல்வம் சிறப்புரை ஆற்றினார். பின்னர், அமைப்பின் கொடி ஏற்றம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்:
ஜிஎஸ்டி குறைப்பிற்கு மத்திய அரசுக்கு நன்றி,
24 மணி நேரம் கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி,
ஊராட்சி முதல் மாநகராட்சி வரை கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை ஏலம் விடும் குழுவில் வணிகர்களை இணைத்தமைக்கு நன்றி
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் அப்துல் கனிராஜா, முகமது ஷாஜகான், வழக்கறிஞர் செல்லத்துரை பாண்டியன், மாநில துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரங்கநாதன், மாநில அமைப்பு செயலாளர் கௌரி சங்கர், மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் உமா மாரிமுத்து, பட்டுமகேஷ், உமா மகேஸ்வரி, திருச்சி மண்டலச் செயலாளர் நடராஜன், தமிழ் மருத்துவ அணி மதுரை மண்டலச் செயலாளர் கணேசன், மாவட்டச் செயலாளர்கள் தினகரன், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முடிவில், தென்காசி வடக்கு மாவட்டத் தலைவர் அமானுல்லா நன்றியுரை ஆற்றினார்.
ஜெ. அமல்ராஜ், மாவட்ட தலைமை நிருபர், தென்காசி.