Mon. Oct 6th, 2025



தென்காசி மாவட்டம் முழுவதும் ஏக்கர் கணக்கில் உள்ள நெல் வயல்கள், தென்னை தோட்டங்கள் தினமும் காட்டு யானைகளின் தாக்குதலால் அழிந்துவிட்டன. உழைப்பால் வளர்த்த விளைச்சல்கள் கண் முன்னே நாசமாகும் நிலையில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமே ஆபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை மனுக்கள் அளித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வனத்துறை நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது போல அமைதியாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“நாம் எத்தனை முறை கேட்டாலும் அரசு கேட்கவில்லை. எங்கள் துன்பங்களை யார் கேட்பது?” என கண்ணீர் கலந்த குரலில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

பயிர் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டதால், விவசாயிகள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து சாலை மறியல் நடத்துவோம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளை தற்கொலைக்கே தள்ளும் இந்த நிலைமைக்கு உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்டம்
தலைமை செய்தியாளர்

By TN NEWS