குடியாத்தம், செப்டம்பர் 9:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டாட்சியர் திரு. கி. பழனி தலைமை தாங்கினார்.
வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார்.
இந்நிகழ்வில், விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவை:
குடியாத்தம் தங்கம் நகர் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் உணவுப் பொருள்களை எடை போடுவதில் காலதாமதம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலாளத்தூர் அகரம் சேரி வழியாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூராலூர் – வெள்ளேரி பகுதிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள அரசு போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
உள்ளி காணாறு பகுதியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
அணங்கா நல்லூர் செல்லும் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு குழியுமாக உள்ள சாலை விரைவாக சீரமைக்கப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் திருமதி திவ்யா பிரணவம், அரசு மருத்துவர் சதீஷ், நகராட்சி சுகாதார அலுவலர் அலி, வருவாய் ஆய்வாளர் கார்த்திக், உதவியாளர் பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், விவசாய சங்க பிரதிநிதிகள் சம்பத் நாயுடு, துரைசெல்வம், சேகர், பழனிவேலன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்