திருநெல்வேலி ரஹ்மத் நகர் பெல் பின்ஸ் மைதானத்தில் காங்கிரஸ் அரசியல் மாநாடு.
திருநெல்வேலி, ரஹ்மத் நகர்:
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்ததையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் “வாக்குத்திருட்டைத் தடுப்போம் – ஜனநாயகத்தை காப்போம்” என்ற அரசியல் மாநாடு திருநெல்வேலி, ரஹ்மத் நகர் பெல் பின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், “வாக்குத் திருட்டைத் தடுப்போம் – வாக்குரிமையைக் காப்போம்” என்ற பொதுஉறுதிமொழி எடுக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள்:
முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் எம்.பி.
அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் தலைவர் திரு. பவன்கேரோ
அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர்
திரு. கிறிஸ்டோடங்கர்
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. சுராஜ் ஹெக்டே
சட்டமன்றக் காங்கிரஸ் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
முன்னாள் மாநிலத் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. சு. திருநாவுக்கரசர்
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்றக் குழு பொருளாளர், “குமரியின் வளர்ச்சி நாயகன்” திரு. விஜய்வசந்த் எம்.பி.
திரு. பிரவீன் சக்கரவர்த்தி, திரு. டி. ராமசந்திரன் எம்.எல்.ஏ., திரு. எஸ். பழனி நாடார் எம்.எல்.ஏ.,
பொருளாளர் திரு. ரூபி மனோகர், துணைத்தலைவர்
திரு. சொர்ணா சேதுராமன், திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ்,
திரு. சசிகாந்த் செந்தில் எம்.பி., வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் எம்.பி., திரு. ராம்மோகன்,
திரு. துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ., திரு. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., திரு. தாரகை கட்பர்ட் எம்.எல்.ஏ.,
திரு. டி. செல்வம், திரு. என். அருள் பெத்தையா, திரு. கீ. சு.குமார்,
மேலும் திருநெல்வேலி & கன்னியாகுமரி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்.