Mon. Oct 6th, 2025

 

 

 

விழுப்புரத்தில் தமிழ்நாடு காவலர் தின கொண்டாட்டம், 120 காவல் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப். 06) விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் E.S.உமா மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காவலர் தின நிகழ்ச்சியில்,

முதலாவதாக காவலர் நினைவு தூணுக்கு  காவல்துறை துணை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் தொடர்ந்து காவலர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 120 காவல் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காவல்துறை குறித்து சிறப்பாக பேசிய பள்ளி மாணவன் தமிழ்குமரனுக்கு காவல்துறை துணைத் தலைவர் உமா பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில்
காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

உறுதி மொழி:

இந்திய அரசியலமைப்பின்பாலும், தமிழ்நாடு காவல்துறையின் உயரிய நோக்கங்களின்பாலும், நான் உண்மையான ஈடுபாடும் உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று மனமார உறுதி கூறுகிறேன்  மேலும், எவ்வித அச்சமும், விருப்பு வெறுப்பு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் என் கடமையை நிறைவேற்றுவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்”, என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், இளமுருகன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்:  மதியழகன்.

By TN NEWS