Mon. Oct 6th, 2025

 

தென்காசி, செப்டம்பர் 6:
2025 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (06.09.2025) நடைபெற்றது.

மொத்தம் 101 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பங்களாசுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 36 ஆயிரம் பரிசுத்தொகையும், தங்கப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பரிசுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில் பாட்டாக்குறிச்சி பஞ்சாயத்து துணைத்தலைவர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ, மாவட்ட கபடி அசோசியேஷன் செயலாளர் அருள் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற அணியினரை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ், அலுவலக பணியாளர் நம்பிராஜன் ஆகியோர் ஊக்குவித்து வழிநடத்தினர்.

✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS