Sun. Oct 5th, 2025

குடியாத்தம் பஜார் பகுதியில் உள்ள சவுக் மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது

செப்டம்பர் 5


     வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள மிக பழமை வாய்ந்த சவுக் மசூதி நவ்ஜவான் கமிட்டி சார்பில்  நபிகள் நாயகம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு மசூதியின் இமாம் ரஷீத் ஹஜரத் கலந்து கொண்டு நபிகள் நாயகம் அவரின் வாழ்க்கை நெறிமுறைகள் கடைபிடித்தல் குறித்து சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது


இதனைத் தொடர்ந்து சிறப்பு துவா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பளராக  குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தராஜன், வட்டாட்சியர் கி பழனி,‌ நகர காவல் ஆய்வாளர் ருக்மநாதன்,போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சாமிகண்ணு ஆகியோர் கலந்து கொண்டு நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார் இதில் நகராட்சி உறுப்பினர் ஜாவித்,மற்றும் சலீம்,இர்பான்,மஹாராஜா ஜாபர்,ஜாபர்,மற்றும் மசூதியின் நவ்ஜவான் கமிட்டியினர் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

By TN NEWS