தென்காசி:
விநாயகர் சதுர்த்தி விழா பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லாமலும் நடைபெற வேண்டும் என்பதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தென்காசியில் பழைய பேருந்து நிலையத்தில் துவங்கிய அணிவகுப்பு, யானை பாலம் சிக்னல், மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காசி விஸ்வநாதர் கோவில், சுவாமி சன்னதி வீதி, ஜெமினி லாலா கார்னர், முத்தாரம்மன் கோவில், கூலக்கடை பஜார் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
செங்கோட்டையில், ஓம் காளி திடலில் துவங்கிய அணிவகுப்பு, வம்பலந்தான் முக்கு, வல்லம் ரோடு, காமராஜர் காலனி, கே.சி. ரோடு, பம்புஹவுஸ் ரோடு, சன் ரைஸ் கார்னர், ஜவஹர்லால் நேரு ரோடு வழியாக செங்கோட்டை காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.
இந்த அணிவகுப்பில் துணைக் காவல் கண்காணிப்பாளர், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : அமல்ராஜ்
தலைமை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்