தென்காசி:
சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில், விவசாயிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையேற்றார். ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான மும்முனை மின்சாரம் வழங்கவும், ஊத்துமலைப் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தவும் கோரினர். மேலும் பேருந்து நிலையப் பகுதியில் சுகாதார கழிப்பிடம், போக்குவரத்து வசதி, இரட்டைக் குளம் – ஊத்துமலை கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
மொத்தம் 13 கோரிக்கைகளை வலியுறுத்திய இந்த ஆர்ப்பாட்டம் ஊத்துமலைப் பகுதியில் கவனம் ஈர்த்தது.
செய்தியாளர் : அமல்ராஜ்
முதன்மை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்