Tue. Aug 26th, 2025

அரூர் அருகே சுடுகாட்டு பாதை மறிப்பு – மீட்க கோரி பொதுமக்கள் முற்றுகை

தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி பூதிநத்தம் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஒரு குடும்பம் மறித்ததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

சுமார் 80 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில், பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல பயன்படுத்தி வந்த சாலையை முள், கற்கள் போட்டு தடை செய்ததாக மக்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் அந்தக் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் கூறுகையில், “இந்தப் பாதை பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசியமானது. ஆனால் தற்போது தனிப்பட்ட சொந்தம் எனக் கூறி தடை விதிப்பது ஏற்க முடியாதது. வட்டாட்சியர் தலையிட்டு சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும்” என்றார்.

பசுபதி

செய்தியாளர்.

 

By TN NEWS