அமைச்சரின் கூற்றுக்கு எதிராக கண்டனம்
மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை என அமைச்சர் – “அப்பட்டமான பொய்” என தமுமுக குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழக அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை” என தெரிவித்தார்.
ஆனால், தென்காசி மாவட்ட தமுமுக மாவட்ட செயலாளர், இது உண்மைக்கு புறம்பானது எனக் கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பல வருடங்களுக்கு முன்பு 260 படுக்கைகளுடன் இயங்கிய தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் 42 அரசு மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.
தற்போது அந்த மருத்துவமனை 560 படுக்கைகளாக உயர்த்தப்பட்டிருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை எந்த அளவிலும் அதிகரிக்கவில்லை.
இதன் மூலம், மருத்துவர்களின் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கடும் பற்றாக்குறை தெளிவாகிறது என அவர் குற்றஞ்சாட்டினார்.
அமல்ராஜ்
செய்தியாளர்
தென்காசி மாவட்டம்