“தேவதை” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வெளியீடு.
சென்னை சித்லப்பாக்கத்தைச் சேர்ந்த சுஜா., காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் (SI), தனது படைப்பாற்றலால் எழுதிய “தேவதை” என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இப்புத்தகத்தை வெளியிட்டார். வெளியீட்டு விழாவில், அந்த புத்தகத்தை தாம்பரம் மாநகர கூடுதல் காவல் ஆணையர் திருமதி மகேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் பெற்றுக் கொண்டார்.
விழாவின் சிறப்பம்சங்கள்:
காவல் பணியுடன் இணைந்து இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்துவரும் சுஜா. SI-யின் எழுத்து பணி, சக ஊழியர்களிடமும் பொதுமக்களிடமும் பெருமை பெற்றுள்ளது.
“தேவதை” சிறுகதைத் தொகுப்பில், சமூகத்தைத் தொடும் கதைகள், மனித நேயம், பெண்களின் மனம், காவல் பணியின் சவால்கள் போன்ற பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன என குறிப்பிடப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள், இலக்கியம் மற்றும் காவல் பணி இணைந்திருப்பது சமூகத்திற்கு நல்ல செய்தியாகும் என பாராட்டினர்.
இளம் தலைமுறைக்கான ஊக்கமாகவும், காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் சுஜா. SI-யின் முயற்சி வலியுறுத்தப்பட்டது.
விழா நிறைவில், சுஜா. SI, தன்னுடைய படைப்பாற்றலை ஊக்குவித்த குடும்பத்தினருக்கும், காவல் துறை மேலதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
R.தியாகராஜன்