நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அவையில் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளருக்கு அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
அறிமுக கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் துரை வைகோ என்று அவைக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்தார்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இயக்கத் தந்தை தலைவர் வைகோ சார்பிலும் இந்திய குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
20.08.2025
புதுடெல்லி
#DuraiVaiko #Vaiko #MDMK #trichymp #Congress #RahulGandhi #SoniaGandhi #MallikarjunKharge #PriyankaGandhi #INDIAAlliance #MKStalin #UdhayanidhiStalin #DMK
Shaikh Mohideen