Thu. Aug 21st, 2025



குடியாத்தம், ஆக.20 –
வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியாத்தம் வட்டம், நெல்லூர்பேட்டை ஏரியை, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., இன்று (20.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆட்சித் தலைவர், ஏரிக்கரையில் சிலைகள் பாதுகாப்பாக கரைக்கப்படுவதற்கான இடங்கள், பொதுமக்களின் நுழைவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கழிவு மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தார். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல், ஏரியில் கரைக்கும் செயல்முறை பசுமையான முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த ஆய்வில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன், குடியாத்தம் வட்டாட்சியர் பழனி, காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு, ஆட்சித் தலைவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது:

சுற்றுச்சூழலுக்கு-friendly சிலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஏரியில் வேதியியல் கலவையுள்ள வண்ணங்கள், பிளாஸ்டிக் மற்றும் நச்சு பொருட்கள் கலக்கக் கூடாது.

சிலைகள் கரைத்த பிறகு உடனடியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் உறுதி செய்யப்படும்.


இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.

செய்தியாளர்: K.V. இராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா

 

By TN NEWS