உசிலம்பட்டி, ஆக.20 –
உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் விழா தேவர் சிலை அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், சேடபட்டி வட்டாரத் தலைவர் புதுராஜா, ஜெயராஜ், செல்லம்பட்டி வட்டாரத் தலைவர் செந்தில், உசிலம்பட்டி வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன், நகரத் தலைவர் பாண்டிஸ்வரன், நகரச் செயலாளர் தினகரன், முன்னாள் நகரத் தலைவர் காந்தி சரவணன், ஐஎன்டியூசி நிர்வாகிகள் பிரேம் ஆனந்த், செந்தில் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் எல். விஜயகாந்தன், வட்டார துணைத் தலைவர்கள் தமிழ்மாறன், நாகராஜன், செல்வம், வர்த்தக பிரிவு ரவி, சேவாதளம் தொண்டர் முருகேசன், பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி அழகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வீரசேகர்