Thu. Aug 21st, 2025





சபரிமலை, ஆகஸ்ட் 17 –
சபரிமலை கோயில் சிங்க மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு வழக்கமான பூஜை நடைபெற்றது.

பின்னர், சபரிமலைக்கு இளைய பூசாரி (கீழ் சாந்தி) தேர்வு செய்யும் குலுக்கல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீகோவில் முன் நடைபெறும் இந்த குலுக்கலை தேவசம் போர்டு ஆணையர் சுனில்குமார் தலைமையேற்கிறார்.

அதேபோல, காலை 9 மணிக்கு பம்பா கணபதி கோயிலின் மேல் சாந்திகளைத் தேர்ந்தெடுக்கும் குலுக்கலும் நடைபெற உள்ளது.

இந்த மாத பூஜைகள் நிறைவடைந்த பின், வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இணை ஆசிரியர் – சேக் முகைதீன்

By TN NEWS