திருப்பூர், ஆகஸ்ட் 16
கந்து வட்டி கும்பல் அடாவடி – பெண்மணியின் வீட்டை உடைத்து அராஜகம்
திருப்பூர் மாநகராட்சி தெற்கு வட்டம், 52வது வார்டு வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில், பெண்மணியின் வீட்டில் கந்து வட்டி கும்பல் அத்துமீறி நுழைந்து JCB மூலம் இடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பெண்மணி பெற்ற கடனைச் சார்ந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதே தொடர்பாக கும்பல் மிரட்டல் விடுத்ததாக பெண்மணி ஏற்கெனவே திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து மனு ரசீது பெற்றிருந்தார்.
ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை மீண்டும் மிரட்டல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து பெண்மணி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்நாள் மாலை விசாரணைக்கு பெண்மணி காவல் நிலையம் சென்றிருந்த நேரத்தில், கும்பல் அத்துமீறி அவரது வீட்டுக்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி, JCB மூலம் வீடினை இடித்ததோடு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பெண்மணி அளித்த புகாரின் பேரில், பழனிச்சாமி, மணிகண்டன், ஜோதிராமலிங்கம், JCB ஓட்டி வந்த அழகுபாண்டி மற்றும் பிறர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகள் (U/S 191(2), 296(b), 324(4), 332(c), 351(3) BNS r/w 4 OF TNPHW ACT) கீழ் வழக்கு பதிவு செய்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர், சரவணக்குமார்