Thu. Aug 21st, 2025





விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், தனது மனைவி திருமதி சரிதா சிங் உடன் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் மெஹ்ரதாசி கிராமத்திற்குச் சென்றார்.

இந்த கிராமம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார் அவர்களின் சொந்த ஊராகும்.

சார்ஜென்ட் சுரேந்திர குமார் இல்லத்தில், அவரது தாயார் திருமதி நானு தேவி, மனைவி திருமதி சீமா, மற்றும் குழந்தைகள் விருத்திகா மற்றும் தக்ஷ் ஆகியோரைத் தளபதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜுன்ஜுனு மாவட்டம், இந்திய ராணுவத்திற்கு வீரர்களை வழங்கும் பெருமைக்குரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த 21,700 முன்னாள் படைவீரர்கள் மற்றும் 3,552 விமானப்படை வீரர்கள் தற்போது சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஹிந்த்

– உ. விக்னேஷ்வர், சென்னை



 

By TN NEWS