Wed. May 27th, 2026


❇️ சட்டப்பூர்வக் கேள்வி…?

“எம்எல்ஏ பதவி ஏற்பின் உறுதிமொழி; ராஜினாமா செய்யும்போதும் உறுதிமொழி உண்டா?” – பாலபாரதி கேள்வி…?

சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்கள், அண்மையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சூழலில் ஒரு கோணத்தை எழுப்பியுள்ளார்.

“எம்எல்ஏ பதவி ஏற்கும்போது ‘கடவுள் அறிய’ அல்லது ‘உளமாற’ என உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அந்தப் பதவியைத் துறக்கும் எம்எல்ஏக்களின் ராஜினாமாக் கடிதத்தைப் பெறுகிறபோதும் எதாவது உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்களா? கடவுள் அறிய அல்லது உளமாற… இதுபோல் ஏதாவதா?”

அரசியல் தார்மீகப் பொறுப்பு குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள பாலபரதி, ராஜினாமா செயல்முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

– சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி.

🗓️ மே 26, 2026 | 📍 சென்னை.

❇️ கட்சி நிலைப்பாடு…?

“அதிமுக வருகிறது என்றால் பாஜக வருகிறது என்றே அர்த்தம்” – திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது குறித்துக் கடுமையான கருத்து தெரிவித்துள்ளார்.

“அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு வந்தால் அவர்களை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி இணைத்தால், அதிமுகவுக்குப் பதிலாக பாஜகதான் கட்சியில் இணைகிறது என்று பொருள்படும்.”

தேசியக் கட்சியான பாஜகவின் விரிவாக்கத்திற்கு இத்தகைய இணைப்புகள் உதவும் என எச்சரித்துள்ள திருமாவளவன், ‘அதிமுக வருகிறது என்றால் பாஜக வருகிறது என்றே அர்த்தம்’ என விளக்கினார்.

– விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

🗓️ மே 26, 2026 | 📍 சென்னை.

❇️ பாஜக தலைவர் கேள்வி…?

“கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் மாற்று அரசியலா?” – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதல்வர் விஜய் அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆட்சி அமைத்த 15 நாட்களிலேயே கொடூரக் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், மாமூல் வேட்டைகள், பெட்ரோல் குண்டு மற்றும் தொடர் மின்வெட்டு என மக்கள் அவதிப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

“ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பாதுகாப்பு, மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டு, கமுக்கமாக கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் விஜய் அவர்கள் முன்மொழிந்த ‘மாற்று’ அரசியலா?”

ரீல்ஸ் மோகத்தில் தலைமைச் செயலகம் அல்லது பொதுமக்கள் முன் வராமல் ஒதுங்குவது மாற்று அரசியலுக்கு எடுத்துக்காட்டல்ல என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

– பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

🗓️ மே 26, 2026 | 📍 சென்னை

❇️ அதிமுக ஐடி விங் எதிர்வினை.

“ராஜினாமா கடிதம் சபாநாயகரிடம் தரணும்; அமைச்சரிடம் இணைப்பு விழா ‘Backdoor Deal’” – அதிமுக பதிலடி.

தவெக ஆச்சரியக்குறிகளுக்கு (தமிழக வெற்றிக் கழகம்) அதிமுக ஐடி விங் கடும் பதில் அளித்துள்ளது. “இப்பதான் First Time Government Form பண்ணி சீட்டில் உக்காந்திருக்கீங்க.. அதற்குள் 50 வருஷ வரலாறு இருக்கும் அதிமுகவைப் பார்த்து விரல் நீட்டுறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தலைமைச் செயலகத்தில் சபாநாயகரைப் பார்த்து முறைப்படி ராஜினாமா லெட்டர் கொடுக்கலாம். ஆனால் ராஜினாமா செய்த அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரைப் பார்த்து இணைப்பு விழா நடத்தக் கூடாது. தார்மீகப் பொறுப்புன்னு சொன்னால் சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சரை எதுக்குச் சந்திக்கணும்? இது Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு.”

தவெக தலைமையின் நிலை குறித்து ‘ரீல்ஸ் போட்டு விளையாடுங்க பாஸ்’ என முடித்துள்ள அதிமுக ஐடி பிரிவு, தங்களுக்கு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழும் வரலாறு உள்ளதாக நினைவூட்டியுள்ளது.

– அதிமுக ஐடி விங் அறிக்கை…!

🗓️ மே 26, 2026 | சமூக ஊடகம்.


❇️ இடதுசாரி நிலைப்பாடு.

“அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல” – சிபிஎம்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழு, சமீபத்தில் நிகழ்ந்த அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டு ராஜினாமா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

“தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணையை மீறி, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியைத் துறந்து, ஆளுங்கட்சியில் சேர்வது ஜனநாயக ஒழுக்கத்திற்கு எதிரானது. இது ஆரோக்கியமான அரசியலுக்குச் சரியான முன்னுதாரணமல்ல. கட்சி மாற்றுத் தடைச் சட்டம் (anti-defection law) மற்றும் தார்மீகப் பொறுப்பு குறித்துப் புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.”

சிபிஎம், இத்தகைய இணைப்புகளை மறைமுகமான அழுத்தம் மற்றும் பதவி ஆசையின் வெளிப்பாடாகக் கருதுகிறது. உடனடியாக இழப்பீடு கோருவதோடு, எதிர்காலத்தில் தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பு கிடைக்க நியாயமான விதிமுறைகள் தேவை என வலியுறுத்தியுள்ளது.

– சிபிஎம் மாநிலச் செயற்குழு / செய்திக் குறிப்பு

By TN NEWS