Wed. May 27th, 2026

📍 வேலூர் மாவட்டம், குடியாத்தம் (பழைய பேருந்து நிலையம்) – மே 26, 2026 .

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலம் தழுவிய போராட்டம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (மே 26) மாலை நடைபெற்றது. விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் தோழர் கே. சாமிநாதன் மற்றும் தோழர் எஸ். மகேஷ்பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

போராட்டத்தின் முன்னிலை வகித்தோரில் சி. தசரதன், எஸ். கோடீஸ்வரன், கே. பாண்டுரங்கன், எம். சிவஞானம், டி. கோவிந்தன் ஆகியோர் அடங்குவர்.

கோரிக்கைகளை விளக்கி உரையாற்றிய தோழர்கள்: துரை செல்வம், கே.சி. பிரேம்குமார், ஜி. நரசிம்மன், நா. பரமசிவம் ஆகியோர் ஆவர். அவர்கள் பல்வேறு அரசுக் கொள்கை மாற்றங்களை வலியுறுத்திப் பேசினார்கள்.

📢 போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:

  • ✅ ஒன்றிய அரசே – உரம் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.
  • ✅ மாநில அரசே – கூட்டுறவு பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • ✅ மோர்த்தானா அணையைச் சுற்றுலாத் தளமாக அமைக்கக் கோரிக்கை.
  • ✅ பத்தலபள்ளி அணையை விரைவாகக் கட்ட வேண்டும்.
  • ✅ குடியாத்தத்தில் மாட்டுச் சந்தையை மீண்டும் அமைக்க வேண்டும்.
  • ✅ அனைத்து ஏரிகளையும் தூர்வாரக் கோரிக்கை.
  • ✅ 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மீண்டும் பழைய பெயரில் வழங்க வேண்டும்.
  • ✅ அக்ராவரம் – மீனூர் இடையே கவுண்டன்யாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவற்றுடன் பிற தொடர்புடைய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தின் இறுதியில் தோழர் சுப்பிரமணி நன்றி கூறினார். போராட்டம் முழு அமைதியான முறையில் நிறைவுற்றது.

கே.வி. ராஜேந்திரன்
செய்தியாளர், குடியாத்தம் தாலுகா
#KudiyathamProtest #TamilNaduFarmers #FertilizerPriceHike #LoanWaiver #Vellore

By TN NEWS