📍 கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை – 26 மே, 2026 :
மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தமிமுன் அன்சாரி அவர்கள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “வரும் நோயாளிகளிடம் கனிவாகவும், பண்புடனும் நடந்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், நோயாளிகளின் நலனை முதன்மைப்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வினால் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரம் உயர்வதுடன், நோயாளிகளுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



