Wed. May 27th, 2026

குடியாத்தம், மே 26: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர்.பேட்டையில் செயல்பட்டு வரும் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க. சிந்து அவர்களிடம் இன்று மனு ஒன்று அளிக்கப்பட்டது.

புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ், பள்ளிக் கல்விக்குழு முன்னாள் துணைத் தலைவர் கோ. ஜெய் வேலு ஆகியோர் சட்டமன்ற உறுப்பினரைச் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் மனுவை அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் க. சிந்து, பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நகரச் செயலாளர் இளங்கோ உடனிருந்தார்.

செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்.

By TN NEWS