Thu. Aug 21st, 2025

*இந்திய தேசியக்கொடியை ஏற்ற வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை*


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை இந்திய தேசியக் கொடியை ஏற்ற விடாமல் புறக்கணித்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து கொடியேற்ற பள்ளிக்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் அவர்களை கொடி ஏற்ற விடாமல் அங்கிருந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சபாபதி மற்றும் வேலாயுதம் ஆகியோர் தடுத்து நிறுத்தி தேசிய கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.

மனமுடைந்து இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னை பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்காமல் தடுத்து  நிறுத்தி கேவலப்படுத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


குடியாத்தம்  தாலுக்கா
செய்தியாளர் கே‌ வி ராஜேந்திரன்

By TN NEWS