Thu. Aug 21st, 2025


குடியாத்தம், ஆகஸ்ட் 15 –
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் வேலூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க குடியாத்தம் கிளை தலைவர் எஸ். சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ். கோட்டீஸ்வரன், பொருளாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் ரங்கநாதன், பொது மேலாளர் செல்வம், மேலாளர் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ECG, இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், கண்ணழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டனர்.

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, 20 பேருக்கு இலவச கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க மாவட்ட மகளிரணி உறுப்பினர் எஸ். ரமாநந்தினி, இணைச் செயலாளர்கள் எம்.ஆர். மணி, ஆர். தருமன், துணைத்தலைவர் ஏ.டி. முனிசாமி ஆகியோர் செய்தனர். மொத்தம் 120க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS