உசிலம்பட்டி, ஆக.16
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, மதுரை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, இந்திய தேசிய தொழிலாளர் யூனியன் – காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் பலகை திறந்து வைக்கப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் தலைமை வகித்தார். உசிலம்பட்டி தொழிற்சங்க கிளை பொறுப்பாளர் பிரேம் ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. எல். விஜயகாந்தன், முன்னாள் மகளிர் அணி மாவட்டத் தலைவி பிரவீணா, வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன், சேடப்பட்டி இளைஞர் காங்கிரஸ் பி. ராமசாமி, வட்டாரத் துணைத் தலைவர் அர்ச்சுணன், முருகேசன், பெரியசாமி, தொழிற்சங்க கிளைச் செயலாளர்கள் யோக்கியன், இளங்கோவன், சட்ட ஆலோசகர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வம், மகேஸ், சுப்பிரமணி, சரவணகுமார், சுகுமார், தங்கத்துரை, ரமேஷ்குமார், கருப்பையா, கண்ணன், மகாமந்திரி, சுரேஷ், பால்ராஜ் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
இறுதியாக, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் – வீரசேகர்