திருக்கோவலூர் அங்கவை-சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் “வரலாற்றைப் படிப்போம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு மையத் தலைவர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் வழங்கினார்.
கோவில் செயல் அலுவலர் வை. அறிவழகன் மாணவிகளுக்கு வரலாற்றுப் புத்தகங்களை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில், கோவில் அறங்காவலர் உமாமகேஸ்வரி, ஆய்வு மைய துணைச் செயலாளர் பா. கார்த்திகேயன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஷெரிப், சமூக சேவகர்கள் கண்ணன், விஜய் அமிர்ந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
முதன்மை செய்தியாளர்
V. ஜெய்சங்கர்