மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கிவைக்கப்பட்ட, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் “தாயுமானவர்” திட்டத்தின் அங்கமாக,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. எம்.ஏ. சுப்பிரமணியன் அவர்கள், சைதை மேற்கு பகுதி 142வது வட்டத்திற்குட்பட்ட மசூதி தெருவில் பயனாளிகளுக்கு நலப்பொருட்களை வழங்கினார்.
#தாயுமானவர்_திட்டம்
ஆர். தியாகராஜன்
தமிழ்நாடு டுடே
PRO சோழிங்கநல்லூர்